நீதிமன்ற உத்தரவை மீறி அரச மரம் அகற்றப்பட்ட சம்பவம்
தருமபுரி மாவட்டம் பாரதிபுரத்தில், கோயில் வாசலில் இருந்த பல ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரம், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருந்தபோதும் அகற்றப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் திமுகவைச் சேர்ந்த பிரமுகரும், மருத்துவமனை நடத்தி வருபவருமான சரோஜினியின் மருத்துவமனைக்கு மரம் இடையூறாக இருந்ததால், அவரது ஆதரவாளர்கள் அந்த அரச மரத்தை வெட்டியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி மரம் அகற்றப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.