போதைப் பழக்க ஒழிப்பை வலியுறுத்தும் மாரத்தான் ஓட்டப் போட்டி!
ராணிப்பேட்டை பகுதியில் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் பெருமளவிலான மக்கள் பங்கேற்றனர்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தும் வகையில், ஏழாவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியை அமைச்சர் காந்தி நேரில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டப் போட்டியில், 3,500-க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.