போரூரில் மனைவி கொலை – கணவர் கைது
சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தை குறித்து சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அடிக்கடி தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மதுபோதையில் இருந்த சத்யராஜ், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி ரோஸ்மேரியின் கழுத்தை இறுக்கியும், அவரது தலையை சுவரில் மோதியுமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரோஸ்மேரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சத்யராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.