திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர் படிவம் சார்ந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பெயர் இடம்பெறாதவர்கள், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புபவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய வேண்டியவர்களுக்காக, திருச்சி மாவட்டம் முழுவதும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் பலர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து, தேவையான திருத்தங்களைச் செய்து பயன்பெற்றனர். மேலும், உரிய முகாம்களில் பங்கேற்று சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை கண்காணித்து வருகின்றனர். பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், தேவையான ஆவணங்களுடன் வந்து மீண்டும் பெயர் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.