தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு
சென்னை மாதவரம் பகுதியில், சாலையில் தடுமாறி விழுந்த பெண் மீது தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.
மாதவரம் பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர், அருகிலுள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், சாலையில் இருந்த கல்லில் கால் தடுக்கி அவர் திடீரென கீழே சரிந்தார். அதே சமயம் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி, அவர் விழுந்த இடத்தைக் கவனிக்காமல் சென்றதால், லாரியின் சக்கரத்தில் சரளா சிக்கிக்கொண்டார்.
இந்த கோர விபத்தில் அவர் உடல் பலத்த சேதமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.