நாதக பொறுப்பாளரின் வணிக நிலையம் சேதம் – திமுக கவுன்சிலர் தொடர்பு, 6 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நசியனூர் அருகே, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியின் சொந்தமான பேக்கரி கடை தாக்கி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
நசியனூர் பகுதியைச் சேர்ந்த நித்தியகுமார் என்பவர், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தனியார் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கடைக்கு வந்த திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் கோவேந்திரன், தன்னுடன் வந்த நபர்களை பயன்படுத்தி கடையை தாக்கி நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆறு பேரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், முன்பிருந்த தனிப்பட்ட விரோதமே இந்த தாக்குதலுக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.