இந்து முன்னணி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு – போலீசார் தீவிர விசாரணை
ஈரோடு நகரில் இந்து முன்னணி அமைப்பின் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்ன சடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் அலுவலகத்தை நடத்தி வருகிறார்.
இந்த அலுவலகத்திற்குள் நுழைந்த இருவர், முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.