பாஜகவினர் முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின் வலியுறுத்தல்
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், பீகார் பட்னாவில் நடைபெற்ற ரோட் ஷோ நிகழ்ச்சியில், ராகுல் காந்தியைப் போன்ற பகுதிநேர அரசியல்வாதிகளாக இருக்காமல், பாஜகவினர் முழுநேர ஊழியர்களாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நபின், அரசியலில் வெற்றிக்கொண்டு செல்ல பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சி தேவையாகும் நீண்ட தூர பந்தயம் என்றும், எந்த குறுக்கு வழியும் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான பாஜகவினர் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.