அமெரிக்கா புதிய கடற்படை அணியை உருவாக்க திட்டம் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா கடற்படையில் இதுவரை இல்லாத புதிய அணியை உருவாக்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
புளோரிடா மாகாணம், மார்அ-லோகோவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புதிய கடற்படை அணியில் மிகப்பிரம்மாண்ட போர் கப்பல்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இவை இதுவரை உருவாக்கப்பட்ட போர் கப்பல்களை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவை ஆக இருக்கும் எனவும், அந்த அணியில் சேர்க்கப்படும் முதல் பிரமாண்ட கப்பலுக்கு USS Defiant என பெயர் சூட்டப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.