அரசியலில் நிலையான நட்பும் பகையும் இல்லை – நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியைப் பதவி விலக்குவதுதான் அதிமுக–பாஜக கூட்டணியின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அரசியல் களத்தில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரமான எதிரியும் இல்லை என அவர் தெரிவித்தார். ஒரே சிந்தனையையும் நோக்கையும் கொண்ட கட்சிகள் ஒன்றாகச் சேர்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.