சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
நிலவி வரும் அரசியல் பரபரப்புகளுக்கிடையே, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், ஒருநாள் பயணமாக சென்னையை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் எல். முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட தலைவர்கள் சால்வை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பியூஷ் கோயலின் படங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திய பாஜக நிர்வாகிகள் கோஷமெழுப்பி உற்சாக வரவேற்பை வழங்கினர்.