அக்னிபாத் திட்டத்தில் தென் மாவட்டத்திலிருந்து 1,340 பேர் ராணுவத்தில் தேர்வு
அக்னிபாத் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவம் வீரர்களை தேர்வு செய்வதில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோருக்கான உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றன.
மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்றதில், தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,340 பேர் தற்போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தென்காசி மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவ சேவையில் சேர்ந்துள்ளனர்.
நெட்டிசன்கள், நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.