திருவள்ளூர் : ரயில் வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்
ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை எடுத்துச் சென்ற நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூளூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு ரயிலில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக கவனத்தில் பட்ட நான்கு பேரின் பயணப் பைகளைக் காவல்துறையினர் பரிசோதித்தனர். அந்த சோதனையில், பைகளுக்குள் தங்கம், வெள்ளி மற்றும் பெரும் தொகை ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் ஹவாலா முறையில் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.