குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடிய விஜய்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.
விழாவின் முக்கிய அம்சமாக, விஜய் குழந்தைகளுடன் சேர்ந்து பிரமாண்ட கேக்கை வெட்டி, அதை குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார். அவரது இந்த எளிமையான அணுகுமுறை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கவர்ந்தது.
இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.