போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடிகம்பம் – மக்கள் கடும் எதிர்ப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு, கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் போலீசார் பாதுகாப்புடன் கொடிகம்பம் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து விழாவுக்கான கொடிகம்பம் கோட்டை வாசல் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கு முன்பு, நீதிமன்ற உத்தரவு இருந்தும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படாத சூழலில், குறிப்பிட்ட மத விழாவிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கொடிகம்பம் எடுத்துச் செல்லப்பட்டதை கண்ட பொதுமக்கள், இது ஒருதலைப்பட்சமான அணுகுமுறை என குற்றம் சாட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதி வழங்கப்படுவதாக கூறி, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.