திருமுறை திருவிழா மக்களிடையே ஊக்கத்தை உருவாக்குகிறது
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருமுறை திருவிழா, பொதுமக்களின் மனங்களில் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தி வருவதாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த விழா மனிதர்களின் உள்ளங்களில் நல்ல சிந்தனைகளை விதைப்பதோடு, வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற அனைவருக்கும் தூண்டுகோலாக அமைகிறது எனக் கூறினார்.
மேலும் உரையாற்றிய சங்கராச்சாரியார், நாட்டில் ஆன்மிக வளர்ச்சி நிலைபெற வேண்டும் என்றால், குழந்தைகளை சிறந்த ஒழுக்கத்துடனும் மதிப்புகளுடனும் வளர்ப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.