மொழி வேறுபாடுகள் ஏற்படுத்தும் தடைகளை அகற்ற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து கல்வி பயிலும் மாணவர்களை அன்புடன் வரவேற்றார்.
“சென்னை ஐஐடியில் தமிழ் கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மொழி காரணமாக உருவாகும் மனத் தடைகள் மற்றும் இடைவெளிகளை நீக்குவது அவசியம் என வலியுறுத்தினார்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய மொழிகளை கற்றுக்கொள்வது எளிதாகி இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தானும் தமிழில் உரையாட கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.