தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளில் ஈடுபடாமல் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் பணிகளை ஒதுக்கிவிட்டு மருத்துவமனை வளாகத்தில் அமைதியான காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, திமுக அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின்படி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையிலான நியமன முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
இந்தப் பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.