தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கிடையே நடைபெறும் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கிடையே வெடித்த மோதலில் 48 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக மாற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் முன்னிலையில் அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது இரு தரப்பும் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய மோதல்களில் இரு நாடுகளிலும் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.