சென்னை, செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த இரண்டு நாட்களும் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று சென்னை நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 22) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தேவையெனில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.