இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு
இடுவாய் கிராமத்தில் நடந்த சம்பவம் காரணமாக அந்த நாளை காவல்துறையினர் கருப்பு தினமாக மாற்றியுள்ளதாக, பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இடுவாய் ஊராட்சியின் கீழ் வரும் சின்ன காளிபாளையம் பகுதியில், குப்பைகளை அகற்ற வந்த மாநகராட்சி வாகனங்களை எதிர்த்து பொதுமக்கள் ஒன்று திரண்டு, அவற்றைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்ற மக்களை காவல்துறையினர் ஒரே நேரத்தில் கைது செய்ய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், பொதுமக்களும் காவலர்களும் சேர்த்து மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், பொதுமக்கள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இடுவாய் கிராமம் காவல்துறையினரால் கருப்பு நாளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.