விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினர்.
1971ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. அந்தப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு வீரர்களின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுகூர்ந்தனர்.