காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சந்தேக மரணம் என உறவினர்கள் போராட்டம்
சென்னை அம்பத்தூரில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மாதா, சென்னை அம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் மர்மமான சூழலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அவரது உடல் சென்னையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உண்மை நிலை வெளிவர வேண்டும் என வலியுறுத்தி, உடலை அடக்கம் செய்ய மறுத்து, அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.