உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி, ரக்சிதா தகுதி சுற்றுக்கு முன்னேற்றம்
அசாமின் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்கின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டிகளில், இந்தியாவின் முதல் நிலை வீராங்கனை தன்வி சர்மா, 15–12, 15–7 என்ற நேரடிச் செட்களில் இந்தோனேசியாவின் ஓய் வினார்டோவை வீழ்த்தி கால் இறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், உன்னதி ஹூடா, 15–8, 15–5 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் அலிஸ் வாங்கை எளிதாக வென்றார்.
அதேபோல், இந்திய வீராங்கனை ரக்சிதா எஸ், சிங்கப்பூர் வீராங்கனை ஆலியா ஜக்காரியாவை 11–15, 15–5, 15–8 என்ற கணக்கில் தோற்கடித்து முன்னேற்றம் கண்டார்.
ஆடவர் பிரிவில், ஞான தத்து, சக இந்திய வீரர் சூர்யாக்ஸ் ராவத்தை 11–15, 15–6, 15–11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கால் இறுதி முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றிகளால் இந்திய அணியின் தங்க நம்பிக்கைகள் மேலும் வலுவடைந்துள்ளன.