அம்பாசமுத்திரம் பகுதியில் சிவன் கோயிலில் இருந்து பக்திப் பாடல்களுடன் ஊர்வலமாக சென்ற சிறுவர்கள்
மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள சிவாலயத்தில் இருந்து சிறுவர்கள் பக்தி பாடல்களை இசைத்தபடி ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றனர்.
மார்கழி மாதம் முழுவதும் விரத அனுஷ்டானம் மேற்கொண்டு, பெருமாளை தன் துணைவனாகப் பெற்ற சிறப்பு ஆண்டாளுக்கு உண்டு என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு, மார்கழி மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் குழுக்களாகச் சேர்ந்து சிவபெருமானையும், பெருமாளையும் புகழ்ந்து பாடல்கள் பாடுவது வழக்கமாக உள்ளது.
அந்த அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவன் கோயிலில் அதிகாலை நேரத்தில் சிறுவர்கள் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருவெம்பாவை, தேவாரம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை உள்ளிட்ட பக்தி பாடல்களை பாடியபடி, அகஸ்தீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தேரோடும் வீதிகளில், 50-க்கும் அதிகமான சிறுவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.