எ.வ.வேலுவை தோற்கடிக்கும் வியூகம்: பாஜக பயிற்சி முகாமில் ஆலோசனை
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற பாஜக பயிற்சி முகாமில், அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு, அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மாநில செயலாளர் ஆனந்த் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமின் போது, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதே நேரத்தில், கடந்த 15 ஆண்டுகளாக திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து வரும் எ.வ.வேலுவை அரசியல் ரீதியாக வீழ்த்தும் திட்டங்கள் குறித்தும் முகாமில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.