அன்புமணி அலுவலகத்தில் பாமக தேர்தல் விண்ணப்பங்கள் வழங்கல் தொடக்கம்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாமக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள், சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சித் தலைவர் அன்புமணியின் அலுவலகத்தில் விநியோகிக்கப்படத் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த விண்ணப்ப விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ.10,000, தனித் தொகுதிக்கான விண்ணப்பத்திற்கு ரூ.5,000 மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட சில பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவற்றை நிரப்பி கட்சித் தலைவர் அன்புமணியிடம் நேரடியாக ஒப்படைத்தனர்.