விவசாய வளம் பெருக சதசண்டி யாகம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் வளமுடன் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சதசண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் காஞ்சி மகா சுவாமிகளின் 32வது ஆண்டு ஆராதனை பெருவிழா தொடங்கியது.
இந்த விழாவை ஸ்ரீ சங்கர பக்த சபா சார்பில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புயல் மற்றும் பருவமழை காலங்களில் விவசாயம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சதசண்டி யாகம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆன்மிக நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.