முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட பிரதமர் மோடியின் முயற்சி – குடியரசுத் துணை தலைவர்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக தபால் தலையை வெளியிடுவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் எனக் குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், பெரும்பிடுகு முத்தரையரின் நினைவுத் தபால் தலையை வெளியிடுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவும் முயற்சியும் முக்கிய காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளை ஆட்சி செய்த முத்தரையர், 14 போர்களில் பங்கேற்று ஒருபோதும் தோல்வியடையாத வீரராக இருந்தார் என்றும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இத்தகைய வரலாற்று நாயகர்களைப் பற்றி பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மறைக்கப்பட்டு போன இந்திய வீரர்களின் பெருமைகளையும் வரலாற்றுச் சாதனைகளையும் மீட்டெடுக்கும் பணியை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.