கொப்பரைத் தேங்காய் ஆதார விலை உயர்வு – பிரதமருக்கு பாஜக மாநில தலைவர் பாராட்டு
கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ₹445 ஆகவும், பால் கொப்பரைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் போன்ற பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் தென்னை விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு, தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.