தேனி : திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்
திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்பற்றாத தமிழக அரசைக் கண்டித்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அந்த உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் பின்னணியில், தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து, தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சன்னாசி பாபு தலைமையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.