போதைப் பொருள் பரவலில் தமிழகத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது திமுக ஆட்சி : நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சிக் காலத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து, தமிழ்நாடு நாட்டிலேயே முக்கிய மாநிலமாக மாறியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பள்ளிக்கூடங்கள் அருகில்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
நகரங்களில் வசிப்பவர்களுக்கு உயர்தர போதைப் பொருட்கள், கிராமப்புறங்களில் கஞ்சா – இதுவே திமுக அரசின் “சாதனை” என அவர் விமர்சனம் செய்தார்.
மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முதலமைச்சர் கவனிக்காமல் இருப்பதாகவும், அறிவிக்கப்பட்டிருந்த 12 லட்சம் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைத் தொகையை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.