மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், மேகதாது அணை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய நீர்வள ஆணையத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எந்த சூழலிலும் தமிழக அரசு ஒப்புதல் வழங்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.