குலசேகரன்பட்டினம்: அதிகரிக்கும் கடல் அரிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை அவசியம்

Date:

குலசேகரன்பட்டினம்: அதிகரிக்கும் கடல் அரிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை அவசியம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

குலசேகரன்பட்டினம் புறநகரில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சாலையை கடல் அரிப்பு பெரிதும் பாதித்துள்ளது. கடல் அலைகள் கொட்டிய மணல் திட்டுகள் சாலையை முழுவதுமாக மூடி விட்டதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 100 மீட்டர் நீளத்தில், இரண்டு அடி உயரம் வரை மணல் திட்டுகள் குவிந்துள்ளதால், போக்குவரத்து மிகவும் சிரமமாகி விட்டதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சாலையில் படிந்துள்ள மணலை நீக்கி, கடல் அரிப்பு மேலும் பரவாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில்...

பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்

பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம் தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு...

இந்தியா – மலேசியா இணைந்த ராணுவப் பயிற்சி!

இந்தியா – மலேசியா இணைந்த ராணுவப் பயிற்சி! இந்தியா மற்றும் மலேசியா இணைந்து...

கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!

கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக! கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை...