திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் ஆய்வில் காலணி அணிந்த தொல்லியல் துறை — இந்து மக்கள் கட்சியின் கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணை, காலணியுடன் ஏறி ஆய்வு செய்ததாகக் கூறப்படும் தமிழக தொல்லியல் துறையின் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் தெரிவித்துள்ளார்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தொல்லியல் துறை இத்தனை நாட்களுக்கு பிறகு திடீரென இந்த மலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீபத்தூணில் உள்ள முக்கிய பதிவுகள் அல்லது சான்றுகளை அகற்றுவதற்காகவே ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் வந்தார்களா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மலையில் ஆய்வு மேற்கொள்ள மாநில உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறை ஏதேனும் அனுமதி பெற்றதா என்பதும் கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவித்தார்.
காலணி அணிந்து புனிதத்தூணை ஆய்வு செய்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.