டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் — அபய்குமார் சிங்குக்கு கூடுதல் பொறுப்பு
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ விடுப்பு பெற்றுள்ளார். இதனால், அந்தப் பொறுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் அபய்குமார் சிங்குக்கு தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பு அறிகுறிகளால் அவர் சென்னை கிண்டி பகுதியில் அமைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெறும் அவர், தற்போதுக்கு 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொறுப்பு டிஜிபி பொறுப்பு அபய்குமார் சிங்கிற்கு இடைக்கால பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.