“சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து
நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால், ஆந்திர மாநில முன்னாள் நடிகர்-அரசியல்வாதி சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலை அவருக்கும் ஏற்படும் என அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால், தமிழக மக்களை மட்டுமல்ல, தவெக-வையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்தும் சக்தியாக உள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“முதல்வர் எதற்கெடுத்தாலும் ரோடு ஷோ நடத்துகிறார். ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் தத்தளிக்கின்றனர். அந்த நிலையை நேரில் காணும் மனப்பாங்கு இல்லை. மதுரை மாநகராட்சியில் திமுக ஒரே ஒரு மேயரை நியமிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் 75 ஆண்டுகள் பழமையான கட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் துணைமேயருக்கு பொறுப்பு ஒப்படைத்துள்ளது.”
நடிகர் விஜயை பற்றி பேசும் போது அவர்,
“விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் வெற்றி பெற முடியும். இல்லையெனில் சிரஞ்சீவியின் அரசியல் நிலைமையே அவருக்கும் ஏற்படும். ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு துணை முதல்வராக உயர்ந்துள்ளார். விஜய் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்,”
என்று கூறினார்.