ஏலக்காய் விற்பனையில் ₹100 கோடி வரி ஏய்ப்பு? — திமுக கவுன்சிலருக்கு மீதான விசாரணை தீவிரம்
வட மாநிலங்களுக்கு ஏலக்காய் விற்பனை செய்து ₹100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக போடி நகராட்சி திமுக கவுன்சிலர் சங்கர் மீது தீவிர குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவி ராஜராஜேஸ்வரியின் கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நடத்தி வரும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தின் மூலம் பெருமளவு ஏலக்காய் வட மாநிலங்களுக்கு அனுப்பியபோது வரி ஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி அமலாக்கத்துறை (ED), வருமானவரி மற்றும் வணிகவரி துறையினர் சங்கரின் கிடங்குகள் மற்றும் அலுவலகங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர். சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வட்டாரங்கள் கூறுவதாவது:
வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரங்கள் உறுதியாக இருந்தால், சங்கருக்கு எதிராக கைது உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தேனி மாவட்டத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.