“உத்தரவுக்கு எதிராக தடை பெற்றேன்; நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கவில்லை” – அண்ணாமலை விளக்கம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை குறித்த தாம் வெளியிட்ட கருத்து தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விளக்கம் வழங்கியுள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எனக்கு எதிராக முன்பொரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக வேறு நீதிமன்றத்தில் தடை பெற்றேன். இது ஒரு குடிமகனுக்கான சட்டபூர்வமான உரிமை” என்று தெரிவித்தார்.
மேலும், “நீதிபதியின் தீர்ப்பின் சட்டப்பூர்வ விளக்கத்தைக் கேள்வி எழுப்பினாலும், நான் ஒருபோதும் அவரது மீது தனிப்பட்ட விமர்சனம் செய்யவில்லை” எனத் தாம் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தடுத்து தெளிவு படுத்தினார்.
இதற்கிடையில், நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு பொருளாக உள்ளன.