திமுக அரசுக்கு ‘நல்ல அறிவு வேண்டி’ முருகனிடம் வேண்டுகோள் – விஷ்வ இந்து பரிஷத் சிதறு தேங்காய் உடைத்துப் பிரார்த்தனை
சென்னை பம்மல் பகுதியில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள், ‘திமுகவினருக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டும்’ என்று வேண்டி சிதறு தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழகம் பிரிவு, மாதம் இரண்டு முறை முருகன் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதை வழக்கமாக கடைபிடித்து வருகிறது. அந்த மரபின் ஒரு பகுதியாக, பம்மல் சுப்பிரமணியன் கோயிலில் உறுப்பினர்கள் ஒன்று கூடி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடத்தினர்.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, திமுக அரசை கண்டிப்பதோடு, ஆட்சியாளர்களுக்கு நல்ல அறிவு ஏற்பட வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக்கொண்டு சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில், சென்னை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வடபழனி பிரிவு பொறுப்பாளர் ஹரிஷ், வடதமிழகம் மாநில அமைப்பு செயலாளர் ராமன், தென் தமிழக அமைப்புச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.