யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி — பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை இணைக்கப்பட்டுள்ளதை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பன்னெடுங்காலமாக பாரதத்தில் கொண்டாடப்படும் தீபாவளி உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதால், இந்தியக் கலாச்சாரத்தின் மகத்துவம் மேலும் பிரபலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தீபத்தின் ஒளியைப் பிரதிபலிக்கும் இந்தப் பண்டிகை உலக அரங்கில் உயர்ந்திடுவது வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரியத்தை பேணும் ஊக்கம் அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
இந்த சிறப்பான அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனிப்பட்ட நன்றி தெரிவித்தார்.