யுனெஸ்கோ மறையாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்ப்பு: மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து
யுனெஸ்கோவின் மறையாத கலாச்சார பாரம்பரிய (Intangible Cultural Heritage) பட்டியலில் தீபாவளிப் பண்டிகை அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டதை மத்திய அமைச்சர் எல். முருகன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
தாம் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி “தீமை மீது நன்மை வெல்லும்” என்பதைக் குறிக்கும் பண்டிகை மட்டுமல்லாது, இந்தியர்களின் வாழ்வியல், மரபு, எண்ணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்திய பாரம்பரியங்களை சர்வதேச அளவில் எடுத்துச் சென்று உலகம் அறியச் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படுவது, இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய செல்வாக்கை மேலும் உயர்த்தும் ஒரு வரலாற்றுச் சிறப்பான தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனைக்கான மகிழ்ச்சியில், அனைத்து இந்தியர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.