மதுரை: ஆசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் மோதிய வீடியோ வைரல்
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் ஒரு பள்ளியில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பிரிவாகச் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தச் சண்டையில், ஆசிரியர்கள் தலையிட்டு தடுக்க முயன்றும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டிச் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் பெற்ற போலீசார் பள்ளிக்கு சென்று, சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், பள்ளி சுற்றுப்புறங்களில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், இதனால் மாணவர்களிடையே அடிக்கடி சண்டைகள் உருவாகின்றன என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.