“நீதித்துறையை மிரட்ட முயற்சி” – பாஜக மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக–காங்கிரஸ் கூட்டணி நீதித்துறையை மிரட்ட முயற்சி செய்துவருகிறது என தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர, இண்டி கூட்டணியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதை அவர் கண்டித்தார். இது “வெட்கக்கேடான நடவடிக்கை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவசரசட்ட காலத்தில் நாட்டின் அரசியலமைப்பு பாதிக்கப்பட்டதாக மக்கள் இன்னமும் நினைவில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
திமுக குறித்து பேசும்போது, கட்சியில் மதத்தைக் கேலிப்படுத்தியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், வழிபாட்டு உரிமையை கட்டுப்படுத்த முயற்சிகளை நீதிமன்றம் தடைசெய்தது திமுகவுக்கு பெரும் பின்னடைவு எனவும் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் மீது அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், அத்தகைய செயல்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்த்து முறியடிக்கும் என கூறினார்.