காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்பி பேச்சை கவனிக்காமல் பேசிய நிர்வாகிகள் – இடையூறால் சலசலப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் எம்பிக்களின் பேச்சை நிர்வாகிகள் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
சோழவந்தான் தொகுதி சார்பாக நடைபெற்ற இந்த அமைப்பு சீரமைப்பு இயக்கக் கூட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன் மற்றும் சுதர்சன் நாச்சியப்பன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும்பாலும் வயதான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டதுடன், பல நாற்காலிகள் காலியாக இருந்தது எம்பிக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
பின்னர், முன்னாள் எம்பி சுதர்சன் நாச்சியப்பன் உரையாற்றும் போது மைக் சரியாக செயல்படாததால், நிர்வாகிகள் பலரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே இருந்தனர். இது பேச்சு நடைமுறைக்கு இடையூறாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் ஜி ஆங்கிலத்தில் நீண்ட நேரம் உரையாற்றியபோது, கூட்டத்தில் இருந்த வயோதிகர்கள் மற்றும் மூதாட்டிகள் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் சிரித்துக் பேசிக்கொண்டிருந்ததால், நிகழ்வில் சலசலப்பு நிலவியது.
இந்தச் சம்பவம், கூட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாகிகளின் அணுகுமுறையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.