கோவை: நன்னடத்தை அடிப்படையில் விடுதலை… மீண்டும் நகை கொள்ளை – 1 கிலோ தங்கம் பறிமுதல்
கோவை பெரியகடை வீதியில் உள்ள நகை பட்டறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவநீதன் நடத்தும் நகைப்பட்டறைக்குள் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து, சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் இருந்த மரப்பெட்டியை தூக்கிச்சென்றனர்.
புகார் பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தங்கத் துகள்களை சலித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முருகன் மற்றும் சின்னதுரை ஆகியோர்தான் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக முருகன், 2017ஆம் ஆண்டு அரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரையும் போலீசார் கைது செய்து, திருட்டு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், “முருகனின் நன்னடத்தையை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.