அன்னதான திட்டம் தொடங்க வந்ததால் கருப்பு கொடி முடிவை மாற்றிய பாஜகவினர் – கொடைக்கானலில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கருப்பு கொடி காட்டும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டதால் அங்கு சிறிய பரபரப்பு நிலவியது.
திருப்பரங்குன்றம் சம்பவத்தை கண்டித்து, அமைச்சர் சேகர்பாபு வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், அமைச்சர் சேகர்பாபு குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைக்க வந்ததால், போராட்ட முடிவை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் திடீரென மாற்றிக் கொண்டனர்.
அத்துடன், இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு தனது “தவறை திருத்திக் கொள்ள வேண்டும்” என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.