மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, மகன் கொல்லப்பட்ட துயரத்தை தாங்க முடியாமல் தாய் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவு அப்பகுதியில் துயரம் பரப்பியுள்ளது.
பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கரலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவரது தாய் அழகுநாச்சி, மனவருத்தத்தில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுநாச்சி உயிரிழந்தார்.
இந்த இரட்டை சோகம் கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.