ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்றிருந்த கடன் தொடர்பில், அவர் நாளைக்குள் தனது பதிலை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடமிருந்து ஸ்டூடியோ கிரீன் 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. வட்டியுடன் அந்தத் தொகை தற்போது 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் தொகையை வசூலிக்க வேண்டும் எனக் கோரி, அர்ஜூன்லால் சுந்தர்தாஸின் சொத்தாட்சியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கு முன்பு ஞானவேல் ராஜா தயாரித்த வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கடன் தொகை செலுத்தல் குறித்த நிலைப்பாட்டை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.