சென்னையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பேரணி நடைபெற்றது.
ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும், மேலும் விவசாயப் பொருட்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.